சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்ற பாஜக பரப்புரையில் நடிகை குஷ்பூ உற்சாகமாக பங்கேற்றார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில், வெற்றிக் கொடி ஏந்திய தமிழகம் என்ற பேரணி நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பேரணியில், திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர் குஷ்பூ பங்கேற்றார். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பேரணியில், குஷ்பூ நடைபயணமாக சென்றார். அப்போது, உற்சாகமாக அவர் மத்தளம் இசைத்து, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜக உத்தேச பட்டியல் இன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதில் குஷ்பூவிற்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. அதே வேளையில் திமுக கோட்டையாக அறியப்படும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.