மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உயிரிழப்பு
என நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் நரசாபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் தனது மனைவி சாந்தாவுடன் ஓசூரில் கோயில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் பிரவீன் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்து வந்ததை மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமுற்ற பிரவீன்குமார் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொலை செய்த மனைவியை பின்னர் மனைவி தூக்கிட்டு உயிரிழப்பு
செய்து கொண்டதாக அவர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். சாந்தாவின் மர்ம மரணம் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் பிரவீன்குமாரை கைது செய்தனர்.