முக்கியச் செய்திகள் செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்க மாநிலத்தில் 4-ம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 91 சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில் 44 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி, அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், 15940 வாக்குச்சாவடிள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று வாகுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்த 3 கட்ட தேர்தல்களின் போதும் பாஜக, திரினாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பல இடங்களில் மோதல் வெடித்ததால், அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

Karthick

இந்தியாவில் 9 மாநிலங்களுக்குள் நுழைந்த பறவை காய்ச்சல்!

Jayapriya

“அரக்கோணம் இரட்டைக்கொலை விவகாரத்தை நியாயப்படுத்தக்கூடாது ” : வேல்முருகன்

Karthick