உணவு என்பது தனி மனித உரிமை, பீப் பிரியாணி அரங்கம் அமைக்க பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத்திடலில், சிங்காரச் சென்னையில் உணவு திருவிழா 2022 என்ற தலைப்பில் ஆகஸ்ட் 12 தொடங்கி ஆகஸ்ட் 14 வரை இந்த உணவு திருவிழா நடைபெறுகிறது. இதனை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து உணவுத் திருவிழாவில் இருக்கும் ஸ்டால்களை பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிங்காரச் சென்னை உணவு திருவிழா என்ற தலைப்பில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு சுவை மிக்க உணவு, உடல் நலனுக்குப் பாதிப்பு ஏற்படாத உணவுகள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 150 அரங்குகள் மூலம் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உடல் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்த்து பாரம்பரிய உணவுகளை, சிறுதானிய உணவுகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு இந்த உணவு கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்படும் எனக் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப உணவு பாதுகாப்புத் துறையில் மூன்று அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பொருட்களின் விற்கும் நடைமுறைக்கு எதிரான விழிப்புணர்வு, உணவுப் பொருட்களின் லேபல்களில் பார்த்துத் தெரிந்து அறிந்து கொண்ட பிறகு பொருட்களை வாங்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘சந்தேகத்தின் பெயரில் மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவன் கைது!’
https://twitter.com/Subramanian_ma/status/1557975997617561600
இந்த உணவு கண்காட்சியில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, உள்ளிட்ட உணவுகளுக்குத் தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பீஃப் பிரியாணிக்கு ஏன் அரங்க அமைக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், நான் கூட பீஃப் பிரியாணி சாப்பிடுவேன், உணவு என்பது தனி மனித உரிமை பீஃப் பிரியாணி அரங்கம் அமைக்கக் கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கி இருப்போம் எனத் தெரிவித்தார்.








