முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி 20 உலகக்கோப்பையில் புதிய ஜெர்ஸியுடன் களமிறங்கும் இந்திய அணி

உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியை வரும் 24ம் தேதி ஆட உள்ளது. அதில், பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றால் அந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களிடையே மேலோங்கி இருக்கும்.

உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் பிசிசிஐ அறிவித்தது. போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஜெர்ஸியை எம்பிஎல் நிறுவனம் தயாரித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்ட புகைப்படத்தில் இந்திய அணி கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித், ஜடேஜா, பும்ரா, கே.எல்.ராகுல் ஆகியோர் புதிய ஜெர்ஸி அணிந்துள்ளனர்.

 

 

Advertisement:
SHARE

Related posts

ஐதராபாத் வந்தடைந்த Sputnik V தடுப்பூசிகள்!

Vandhana

திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

Jeba Arul Robinson

தனது காதலியுடன் நட்பாக பழகியவரை கொலை செய்த இளைஞர்

Jeba Arul Robinson