முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று 1,280 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்

மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,280 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 26,82,137 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 15,650 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,38,772 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,88,80,069 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதேபோல இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 743 பேர் ஆண்கள் மற்றும் 537 பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,453 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 26,30,654 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 19 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 35,833 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 173 பேரும், கோவையில் 145 பேரும், செங்கல்பட்டில் 98 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்திற்கு தடுப்பூசி பெற்றுத்தர வேண்டியது பாஜகவின் கடமை: அமைச்சர்

Saravana Kumar

ஐபிஎல்: ஐதராபாத்தை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே.. மீண்டும் நடக்குமா ஜட்டு மேஜிக்?

Halley karthi

இன்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அவசர ஆலோசனை கூட்டம்!

Saravana Kumar