முருகப் பெருமானின் ஆறாம்படை வீடான பழமுதிர் சோலைமலை முருகன் திருக்கோயிலில் உண்டியல் திறப்பு – 22 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்மலை மீதுள்ள முருகனின் ஆறாம்படை வீடான, அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு இன்று நடைபெற்றது.
ஆலயத்திலுள்ள சோலைமலை மண்டபத்தில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் பணம், நகை, உள்ளிட்டவைகள் எண்ணப்பட்டன. தொகை வரவாக 22 லட்சத்து 84ஆயிரத்து 170 ரூபாயும், தங்கம் 285 கிராம், வெள்ளி 615 கிராம் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக வரப்பெற்றுள்ளது. கோவில் துணை ஆணையர் ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.







