2022-23க்கான தொழில் வரி- சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

2022-23 நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான தொழில் வரியினை செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய-மாநில பிற அரசுத் துறை சார்ந்த அலுவலர்/பணியாளர், தனியார் நிறுவனங்களில்…

2022-23 நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான தொழில் வரியினை
செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய-மாநில பிற
அரசுத் துறை சார்ந்த அலுவலர்/பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்
பணியாளர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோரிடமிருந்து ஆறு மாதத்திற்கு
ஒருமுறை தொழில் வரியினை வசூலிக்க சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919 துணை விதி 138ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2022-23 நிதியாண்டிற்கான முதலாம் அரையாண்டு தொழில் வரியினை பின்வரும்
அட்டவணையின்படி செலுத்தப்பட வேண்டும்.

அரையாண்டுக்கான வருமானம்

கடந்த 01.04.2018 முதல் திருத்தியமைக்கப்பட்ட அரையாண்டு தொழில்வரியை பொறுத்த
வரையில் 21,001 – 30,000 ரூபாய் வரை வருமானம் பெறுவோர் 135 ரூ செலுத்த
வேண்டும், 30,001 – 45,000  வரை ரூ 315, 45,001 – 60,000 ரூ 690, 60,001 – 75,000
ரூ 1025, 75,001 மற்றும் அதற்கு மேல் ரூ 1,250 தொழில் வரியாக செலுத்த வேண்டும்.

மேலும் சென்னை மாநகராட்சிக்கு தொழில் வரியை செலுத்தும் முறைகளை பொறுத்த
வரையில்…

வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி அவர்களின் பெயரில் காசோலைகள்,
அல்லது வரைவோலைகள், கடன்/பற்று அட்டை மூலமாக பெருநகர சென்னை
மாநகராட்சியின் உரிமம் ஆய்வாளர்களிடம் செலுத்தி செலுத்தப்பட்டதற்கான
வரிசீட்டினை (Receipt) பெற்றுக் கொள்ளலாம்.

வருவாய் அலுவர். சென்னை மாநகராட்சி கனரா வங்கி கணக்கு எண். 0976201003413,
பார்க் டவுன் கிளையில், IFSC Code No CNRBooode76 MICR Code of the Branch
600015030 என்ற வங்கி கணக்கின் மூலம் ECS / NEFT / RTGS வகைகளில் தொழில்
வரியினை செலுத்தி, அதற்குண்டான விவரத்தினை arohqpt@gmail.com என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பி அதற்குண்டான வரி ரசீதினை மின்னஞ்சல் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வலைதளம் (www.chennaicorporation.gov.in)
மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் (Nil Transaction fee) தொழில்வரியினை
செலுத்தலாம்.

மண்டலங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களிலும்
தொழில் வரியினை செலுத்தலாம்.

எனவே தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் உரிமையாளர்கள் பெருநகர சென்னை
மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன்படி துணை விதி 138 Cன் படியும் 138 Dன்
படியும் தங்களிடம் பணிபுரிபவர்களின் சம்பளத்தில் ஆகஸ்ட் மாதம் தொழில் வரியினை
பிடித்தம் செய்து, செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அதற்குண்டான விவரங்களுடன்
தாக்கல் செய்து தொழில் வரியினை மேலே அளிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி உரிய
வழிமுறைகளில் செலுத்திடவேண்டும்.

தவறும் பட்சத்தில் சென்னை மாநகர முனிசிபல் சட்ட விதி 1979 துணை விதி 138F
இன் படி அபராதம் வட்டித் தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும்.
பெருகர சென்னை மாநகராட்சியின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தி ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.