சேலத்தில் வங்கி வணிக தொடர்பாளர்கள் போராட்டம்

தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர்கள் தனியார் மயமாக்கலை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.   தமிழ்நாடு கிராம வங்கியில் கிராமப்புறங்களில் வங்கி தொடர்பான சேவைகளை வழங்குவதற்கு வணிக தொடர்பாளர்கள் தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்டோர்…

தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர்கள் தனியார் மயமாக்கலை கண்டித்து
காத்திருப்பு போராட்டம்.

 

தமிழ்நாடு கிராம வங்கியில் கிராமப்புறங்களில் வங்கி தொடர்பான சேவைகளை
வழங்குவதற்கு வணிக தொடர்பாளர்கள் தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் இவர்கள் வங்கியின் கீழ் பணியாற்றி வந்த நிலையில்இவர்கள் அனைவரையும் கார்ப்பரேட் கம்பெனியில் இயங்குவதற்கு தமிழ்நாடு கிராமவங்கி ஏற்பாடு செய்து வந்தது. அதற்கான கடிதங்களையும் வழங்கியுள்ளது .

இந்த நிலையில் தனியார் மயமாக்கலை கண்டித்து சேலம் ஏற்காடு பிரதான சாலையில்
உள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு வங்கி வணிக
தொடர்பாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . பணியை
தொடர்ந்து வங்கியின் கீழே செயல்படுத்திட வேண்டும் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு
விற்க கூடாது பணி நிரந்தரம் வழங்கி நிரந்தர ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் .

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். வங்கி வணிக தொடர்பாளர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தால் அப்பகுதி பரபரப்பாக காட்சியளித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.