பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இஸ்லாமிய அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் முன்னணி அமைப்பான ரீஹப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்எஃப்ஐ) ஆகிய…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இஸ்லாமிய அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் முன்னணி அமைப்பான ரீஹப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்எஃப்ஐ) ஆகிய நிறுவனங்களுக்கு பண மோசடியில் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனங்கள் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இரு அமைப்புகளுக்குச் சொந்தமான 33 வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான 23 வங்கிக் கணக்குகளில் உள்ள  ரூ. 59,12,051 தொகை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரீஹப் இந்தியா பவுண்டேஷனுக்குச் சொந்தமான 10 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 9,50,030 தொகை முடக்கப்பட்டுள்ளது.

இரு அமைப்புகளுக்கும் சொந்தமான 33 வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்தம் ரூ. 68.62 லட்சம் தொகை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.