முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

இந்தியாவுடன் போட்டிபோடும் வங்கதேசம்

இந்தியாவை பின்னுக்குத்தள்ளி வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது வங்கதேசம். வங்கதேசம் தனது 50-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி இருக்கும் வேளையில் அந்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்…

வங்கதேசம் என்றாலே வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் நாடு, அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது போன்ற பொதுக் கருத்துக்கள் இருந்து வரும் சூழலில் தற்போதைய வங்கதேசத்தின் வளர்ச்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தசாப்தங்களாகவே வளர்ச்சிப் பாதையில் பயணித்து வரும் வங்கதேசத்தில், தனி நபர் வருமானம் இந்தியாவைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு ஒரு லட்சம் 48 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், வங்கதேசத்தில் தனி நபர் வருமானம் ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயாக இருந்தது.

கொரோனா காலத்தில் இந்தியா உட்பட பல நாடுகளின் வளர்ச்சி எதிர்மறையில் சென்றுகொண்டிருந்த வேளையில், வங்கதேசத்தின் வளர்ச்சி குறைந்தாலும் எதிர்மறையில் செல்லவில்லை. 1990-களில் 60 சதவீதமாக இருந்த வங்கதேசத்தின் வறுமை இன்று 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசத்தின் வளர்ச்சி பாகிஸ்தானின் வளர்ச்சியைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. நிலப்பரப்பாலும் அரசியல் காரணிகளாலும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வரும் வங்கதேசம், மிகப்பெரிய பலமும் அதிகாரமும் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் போன்ற பெரிய நாடுகளைவிட சிறப்பாகச் செயல்படுவது பாராட்டுக்குரிய ஒன்று.

வங்கதேசத்தின் இந்த வளர்ச்சியானது திடீரென ஏற்படவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு பஞ்சம் மற்றும் இயற்கை பேரழிவுகளால், சில இடர்பாடுகள் ஏற்பட்டபோதும்கூட 1990-ம் ஆண்டுக்குப் பிறகு வங்கதேசத்தின் முன்னேற்றம் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் சேவை மற்றும் உற்பத்தித் திறனை சீராக உயர்த்தியதே இந்த மாற்றத்திற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், வங்கதேசத்தில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, வங்கதேசத்தை, “அடியற்ற கூடை” என்று வர்ணித்தார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செயலாளர் ஹென்றி ஹிஸிங்கர். இதுபோன்ற பல விமர்சனங்களைப் பொய்யாக்கும் விதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது வங்கதேசம்.

Advertisement:
SHARE

Related posts

உலக புத்தக தின கொண்டாட்டம்

Saravana Kumar

நுகர்வு அதிகரிப்பு: முட்டை விலை திடீர் உயர்வு

Halley Karthik

மாநாடு படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்!

Jeba Arul Robinson