பழம்பெரும் நடிகை, சீதாலட்சுமியின் மகளான டான்ஸ் மாஸ்டர் ராதிகா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டர் மற்றும் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை, சீதாலட்சுமியின் மகள் ராதிகா. நாட்டிய கலை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவர் நடத்திய நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சென்னையில், 365 நாட்கள் தினமும் 1 மணி நேரம் இந்நடன நிகழ்வு நடைபெற்றது . நாளின் எண்ணிக்கைக்கேற்ப நடனமாடும் நபர்கள் பங்கேற்று நடனமாடினர். பல முகமறியாத திறமை நிறைந்த கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர். 365 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்நிகழ்வை தொடர்ந்து நிறைவு விழாவாக நடந்த நாட்டிய பெருவிழாவில் 600 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். ஆன்லைன் மூலம் கின்னஸ் குழு கண்காணிப்பில் நடைபெற்ற இந்த நாட்டிய பெருவிழா கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது.
சமீபத்தில் பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இக்குழுவை பாராட்டி கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை டான்ஸ் மாஸ்டர் ராதிகா மற்றும் அவரது உதவியாளர்கள் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஆகியோருக்கு வழங்கினார்.








