வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு 2 ஆண்டுகள் தடை – ஐசிசி உத்தரவு!

வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2023-ம் ஆண்டு எமிரேட்ஸ் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது.  அதாவது…

வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2023-ம் ஆண்டு எமிரேட்ஸ் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது.  அதாவது புதிய ஐபோன் 12-ஐ அன்பளிப்பாக வாங்கியது,  இதுகுறித்த  விவரங்களை ஊழல் தடுப்பு அதிகாரியிடம் தெரிவிக்காதது,  இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காதது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.

இந்த நிலையில் நாசிர் ஹுசைன் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.  இதனைத் தொடர்ந்து  2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடை விதித்துள்ளது.

இதையும் படியுங்கள்: மதுரா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கு – ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை! 

அவர் ஐசிசி-யின் நிபந்தனைகளை நிறைவேற்றும்பட்சத்தில் 2025 ஏப்ரல் 7-ம் தேதி முதல் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அவர் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.