உலகம் முழுவதும் வெப்பமயமாதல் குறித்து பல்வேறு எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு வரும் சூழலில், சுற்றுச்சூழல் தொடர்பாக சில நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்துள்ளது.
வானியல் துறை பலூன்களைக் கொண்டு வளிமண்டல மாற்றங்களை கண்காணித்து வருகிறது. ஆனால், சீனா ஒரு படி மேலே சென்று பலூன் வடிவிலான விமானத்தைக் கொண்டு வளிமண்டல மாற்றங்களைக் கண்காணித்திருக்கிறது. அதில் சிறப்பு என்னவென்றால் மிகப் பெரிய சிகரமான மவுண்ட் எவரெஸ்ட்டுக்கு மேலே இந்த பலூன் வடிவிலான விமானத்தை கொண்டு வளிமண்டல மாற்றங்களை சீனா கண்காணித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“சீனாவின் புவி மாநாடு இலக்கு 2022” இன் ஒரு பகுதியாக இந்த பலூன் வடிவிலான விமானத்தை சீனா அனுப்பியது. 4,300 மீட்டர் உயரத்தில் உள்ள முகாமிலிருந்து இந்த பலூன் வடிவிலான விமானம் உயரே பறந்தது.
அந்த பலூன் வடிவிலான விமானம் தரையிலிருந்து 9,032 மீட்டர் உயரத்தில் பறந்தது. மவுண்ட் எவரெஸ்ட்டின் உயரமே 8,849 மீட்டர் உயரமாகும். இது அதை விட அதிக உயரத்தில் பறந்தது. ஒரு விநாடிக்கு 30 மீட்டர் வேகத்தில் பலூன் வடிவிலான விமானம் பறந்தது. ஜிமு நம்பர் 1 என்ற பெயரிடப்பட்ட இந்த பலூன் வடிவிலான விமானத்தின் கீழே பொருத்தப்பட்டுள்ள வாகனம் 90 டன்கள் எடை கொண்டதாகும்.
சீன அரசு ஊடகமான சிஜிடிஎன் வெளியிட்ட தகவல்படி, வளிமண்டலம் குறித்து தகவல்களைப் பதிவு செய்வதற்காகவே இந்த பலூன் வடிவிலான விமானம் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலில் இருக்கும் தூசி, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகியவற்றை பதிவு செய்வதே இந்த பலூன் வடிவிலான விமானத்தின் பிரதான பணியாகும்.
மேற்கிலிருந்து வீசும் காற்றால் திபெத் பீடபூமி எப்படி பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியமானதாகும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர் என்று சிஜிடிஎன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.