தென்னாப்பிரிக்கா : லாரி, வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் லாரி, வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாகாண நெடுஞ்சாலையில் ஒரு மினிவேன் சென்றுள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 30 பேர் பயணித்துள்ளனர். இதனிடையே குவாசுலு-நடால் என்ற இடத்துக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் முன்னால் சென்ற காரில் உரசி உள்ளது.

இதனை தொடர்ந்து நிற்காமல் சென்ற அந்த மினிவேன் எதிரே வந்த லாரி மீது நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் லாரி ஒரு வழிப்பாதையில் சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த விபத்தில் 14 மாணவர்கள் உயிரிழந்தனர். அடுத்த ஒரே வாரத்தில் தற்போது மீண்டும் கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.