தண்ணீர் குடிக்கச் சென்ற குட்டி குரங்கின் தலை, பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் குடியிருப்பு பகுதியில், பசி மற்றும் வெயில் கொடுமையால், உணவு தேடியும், தண்ணீருக்காகவும் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன. இந்நிலையில், ஒரு வீட்டில் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குட்டிக் குரங்கு ஒன்று குடிக்க முயன்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது எதிர்பாராதவிதமாக குட்டிக்குரங்கின் தலை பாத்திரத்துக்குள் சிக்கிக்கொண்டது. அதில் இருந்து தலையை குரங்கால் எடுக்க முடியவில்லை. இதனால் அங்கும் இங்கும் தவித்த குட்டி, அருகில் இருந்த கம்பியை பிடித்து, வீட்டின் மேலே ஏறியது.
வீட்டின் கூரையில் தாய் குரங்கு வந்ததும் குட்டியின் தலையில் இருந்து தலையில் இருந்து, பாத்திரத்தை எடுக்க முயன்றது. முடியவில்லை.
இதனைக் கண்ட அந்தப் பகுதியினர், வனத்துறைக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் குரங்குக் குட்டியைப் போராடி பிடித்தனர். பின்னர் அதன் தலையில் இருந்த அலுமினிய பாத்திரத்தை வெட்டை எடுத்து குட்டியை விடுவித்தனர். தலையில் இருந்து பாத்திரம் எடுக்கப்பட்டதும் தலைத்தெறிக்க ஓடியது குட்டிக் குரங்கு!