தர்மபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்ததால், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானை பாகன் பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைக்க பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு, வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இதில் தர்மபுரி மாவட்டம், கட்டமடுவு கிராமத்தில் விவசாய நிலத்தில் பிறந்து 4 மாதங்களே
ஆன குட்டி யானை தவறி விழுந்தது. அதை மீட்டு வனத்துறையினர் காட்டு யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. எனவே, வனத்துறையினர் குட்டி யானையை
முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்ல பட்டது. அங்கு, ரகு மற்றும் பொம்மி ஆகிய இரு குட்டி யானைகளை வளர்த்த, ஆஸ்கர் விருது பெற்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெள்ளி அவர்களிடம் ஒப்படைக்க பட்டது.
இந்நிலையில் முதுமலைக்கு கொண்டு சென்ற தாயை பிரிந்த குட்டி யானை, மிகவும்
சோர்வாக காணப்பட்டது. அதனால், குட்டி யானைக்கு தேவையான உணவு, பால், லாக்டோஜன் உள்ளிட்ட புரத பொருட்கள் நிறைந்த உணவு பொருட்கள் வழங்கி பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.குட்டி யானையை பராமரிக்கப்பட்டு
வரும் வீடியோவை தமிழ்நாடு வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹீ
வெளியிட்டுள்ளார்.
ம. ஸ்ரீ மரகதம்







