ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்

பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாகையில் ஜாக்டோ ஜியோவினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ…

பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாகையில் ஜாக்டோ ஜியோவினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில், நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு வழங்கப்படும், காலி பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கழுத்தில் பதாகைகளை மாட்டி, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.