அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள, ரசிகர்கள் இலவச அனுமதி சீட்டை பெறுவதற்கான ஒரு வாய்ப்பினை படக்குழு அறிவித்துள்ளது.
‘இன்று நேற்று நாளை’ புகழ் இயக்குநர் ரவிக்குமாரின் இரண்டாவது திரைப்படம் அயலான். நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்டு ஒரு முழு ஆக்ஷன் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
https://twitter.com/kjr_studios/status/1734446503132115087
இந்நிலையில், அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இலவச அனுமதி சீட்டுக்கு ஒரு வாய்ப்பினை படக்குழு அறிவித்துள்ளது. அயலான் திரைப்படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்திருப்பது யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களுக்கு இலவச அனுமதி சீட்டு வழங்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது.







