அயலான் பொங்கல் – குடும்பத்துடன் தை திருநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள் மற்றும் மகனொடு தை திருநாளை கொண்டாடியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர். நிறுவனம் சார்பில் தயாரான ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு  ஜனவரி 12 ஆம்…

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள் மற்றும் மகனொடு தை திருநாளை கொண்டாடியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர். நிறுவனம் சார்பில் தயாரான ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு  ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வந்தது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத்சிங் கதாநாயகியாக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான அயலான் திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

இதையும் படியுங்கள்: “தை பிறந்தால் வழி பிறக்கும்” – நாடு முழுவதும் தை திருநாள் உற்சாகம்..!

நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியான அயலான் முதல் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல தடைகளுக்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்த கொண்டாடியுள்ளார். சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கொண்டாடிய பொங்கல் திருநாளின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் ஏலியனை இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1746774310440825068?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1746774310440825068%7Ctwgr%5Ee6f751cd9bddf6625a1bde5c1d1d33a415026801%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2024%2Fjan%2F15%2Fsivakarthikeyan-photos-4139939.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.