பொன்னமராவதியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஐந்து வயதுக்கு மேலுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அரசு அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் அல்போன்சா தலையில் சக ஆசிரியர்கள், பயிலும் மாணவ, மாணவிகள் பொன்னமரவாதி பகுதி தெருக்களில் அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்றனர்.
ஆடல், பாடல் வழியாக அரசு பள்ளியில் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள் எனவும் நல்ல பண்பை வளர்த்திட அரசு பள்ளியில் இன்றே சேர்த்திடுக என்று முழக்கம் இட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் சென்றனர்.
—-அனகா காளமேகன்







