உணவு தேடி கல்லார் குப்பை கிடங்கிற்கு வந்த காட்டுயானை!

மூணாறு அருகே உள்ள கல்லார் குப்பை கிடங்கிற்கு உணவு தேடி படையப்பா காட்டுயானை வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், மூணாறில் குடியிருப்புப் பகுதியிலும், கல்லார், நல்லதண்ணீ எஸ்டேட் பகுதியில் இரு தினங்களாக படையப்பா…

மூணாறு அருகே உள்ள கல்லார் குப்பை கிடங்கிற்கு உணவு தேடி படையப்பா காட்டுயானை வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், மூணாறில் குடியிருப்புப் பகுதியிலும், கல்லார், நல்லதண்ணீ எஸ்டேட் பகுதியில் இரு தினங்களாக படையப்பா என்ற காட்டுயானை சுற்றி வருகிறது. இந்நிலையில் கல்லார் பகுதியில் இயங்கும் குப்பை கிடங்கிற்கு உணவு தேடி காலையில் வந்தது.

அப்பொழுது ஊழியர்கள் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் இருந்தனர். படையப்பா யானையை பார்த்த ஊழியர்கள் கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்றனர். பின் உணவு தேடிய படையப்பா அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி கழிவுகளிலிருந்து கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை சாப்பிட்டு சென்றது. கடந்த சில தினங்களுக்கு முன் பிளாஸ்டிக் கழிவுகளை படையப்பா சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.