சிவகங்கை சொக்கநாதபுரத்திலுள்ள ஸ்ரீ உக்கிர பிரித்திங்கரா அம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரை மாத சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா அம்மன் திருக்கோவில். இங்கு மூலவாரக பிரத்திங்கார அம்மனும்,மேலும் கோவிலின் பிரதான சன்னதிகளில் சோட்டானிக்கரை பகவதி அம்மன்,விஸ்வரூப சுப்ரமணிய சுவாமி ,ஆஞ்சநேய சுவாமிகள் ஆகியோர் தனித்தனி சன்னதி கொண்டு பக்தரளுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
சித்திரை மாத அம்மாவாசையையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.க ணபதி பூஜையுடன் தொடங்கிய யாகத்தில் மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான மூலிகை பொருட்கள் சேர்த்து மகா பூர்ணாஹாதி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிறைவாக கலசத்திற்கு உதிரிப்பூக்களால் அர்ச்சனைகள் செய்து கற்பூர ஆராதணை காண்பித்தனர்.இதில் திரளான பக்தர்கள் பங்கேறு அம்மனை வழிப்பட்டு சென்றனர்.
—வேந்தன்