குட்கா பான் மசாலா விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அனைவரும் வீட்டில் கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக ஜாம்பஜார் பகுதியில் அனைத்து கடைகளிலும் கொடியேற்ற சொல்லி விழிப்புணர்வு பேரணி ஏற்படுத்தி அனைத்து கடைகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளிலும் கொடியேற்ற சொல்லி வலியுறுத்தி இருக்கிறோம் என்றார். தமிழ்நாடு முழுவதும் பால் விலை அதிகரித்துள்ளதால், பால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.கடைகளில் குட்கா, பான் மசாலா விற்கப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த விக்கிரமராஜா, “குட்கா, பான்மசாலா விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.







