தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் மனித உடலுக்கு…

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் மனித உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்பதால், தமிழகத்தில் இவற்றை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது.

நீட்டிக்கப்பட்டு வந்த இந்த தடை கடந்த மே 23ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்குதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.