டொவினோ தாமஸ் – மோகன்லால் ரசிகர்களிடையே மோதல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தல்லுமாலா திரைப்படம் காண வந்த ரசிகர்கள் இரு தரப்பினராக பிரிந்து மோதிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆஷிக் உஸ்மான் இயக்கிய “தல்லுமாலா” திரைப்படத்தில் டொவினோ தாமஸ்,…

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தல்லுமாலா திரைப்படம் காண வந்த ரசிகர்கள் இரு தரப்பினராக பிரிந்து மோதிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆஷிக் உஸ்மான் இயக்கிய “தல்லுமாலா” திரைப்படத்தில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. பட ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்த நிலையில் டொவினோ தாமஸின் தல்லுமாலா திரைப்படம் நேற்று கேரளா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது.

இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள திரையரங்கில் தல்லுமாலா திரைப்படத்தை காண வந்த டொவினோ தாமஸின் ரசிகர்களுக்கும் மோகன்லால் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கும்பலாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட காட்சியை சில இளைஞர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தல்லுமாலா திரைப்படத்தின் அறிமுக காட்சியை காண கோழிகோட்டில் உள்ள மால் முன்பு பல ஆயிரம் மக்கள் திரண்டதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.