கோவிட் 19-க்கான பொது சுகாதார அவசர நிலை நீடிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கியது. அதன்பிறகு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது. உலக சுகாதார அமைப்பின் படி, இதுவரை 75.2 கோடி மக்கள் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 68 லட்சம் பேர் கோவிட் 19 தொற்றால் இறந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் 14வது முறையாக ஐக்கிய நாடுகள் சுகாதார குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடியது. இந்த கூட்டத்தை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “இந்த குழு பொது சுகாதார நிலையை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளது. கோவிட் 19 தற்போது மாறி வருகிறது. இந்த சூழலில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படாமல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், கடந்த அக்டோபர் மாதம் கோவிட் 19 தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த டிசம்பரில் மீண்டும் அதிகரித்தது. சீனாவில் விதிகள் தளர்த்தப்பட்டதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் பாதியில் கோவிட் 19 தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதில் 50 சதவீதம் இறப்பு சீனாவில் நிகழ்கிறது. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.