முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

சென்னை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து சென்னை, கடலூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து கடலூர், நாகை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் பாம்பன், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பிப்.1-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுளள்து.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஃபிபா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி!

Jayasheeba

மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

EZHILARASAN D

“ஒரே படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க அஜித், விஜய் விருப்பம்”

G SaravanaKumar