தடுப்பூசி செலுத்திக் கொண்டால் லாட்டரி டிக்கெட்

தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு டோஸ் தடுப்பூசிக்கும் ஒரு லாட்டரி டிக்கெட் வழங்கப்படும் என ஆஸ்திரிய நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் அறிவித்துள்ளார். 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா…

தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு டோஸ் தடுப்பூசிக்கும் ஒரு லாட்டரி டிக்கெட் வழங்கப்படும் என ஆஸ்திரிய நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் அறிவித்துள்ளார்.

2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. ஆஸ்திரியாவில் முதல் முதலாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா கண்டரியப்பட்டது. படிப்படியாக தொற்று வேகமும், இறப்புகளும் அதிகரித்தது. இதனை தடுக்கும் நோக்கில், ஊரடங்குகள் போடப்பட்டன. அதன் பின், கொரோனா தடுப்பூசிகள் அறிமுகமாகி, அதை செலுத்தும் பணி தீரமாக நடைப்பெற்று வந்தது.

இதனையடுத்து, கூடுதல் நோய் தொற்று எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உலக நாடுகள் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசியை போடும் பணியில் இறங்கியுள்ளது. ஆஸ்திரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,03,668 கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது. மேலும், 13,956 கொரோனா இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸ்திரியாவில் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு டோஸ் தடுப்பூசிக்கும் ஒரு லாட்டரி டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்துபவர்கள் 3 லாட்டரி டிக்கெட்டுகள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஒவ்வொரு பத்தாவது லாட்டரி டிக்கெட்டுக்கும் 500 யூரோக்கள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.