தமிழ்நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள 10 லட்சத்து 75 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என பட்டியலிட்டுள்ளது. இவர்களுக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்களில் சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்தவர்கள் எந்தவிதமான சான்றும் இல்லாமல் ஆதார் அட்டை மட்டுமே பயன்படுத்தி தடுப்பூசி மையங்களில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தவணைகளில் எந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசி ஆக வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








