உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கொரோனாவை கையாண்ட விதத்தைப் வெகுவாக பாராட்டியுள்ளது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சியை சேர்ந்த பிரதமர் ஸ்காட் மாரிஸன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரெய்க் கெல்லி, உத்தரப் பிரதேச முதலமைச்சரை தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த, ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலகின் முன்னணி ஊடகங்கள் இந்தியா, கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொண்ட விதத்தை விமர்சித்தன. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த பிணங்கள் எரியூட்ட இடம் இல்லாமல், கங்கை ஆற்றுப் படுகைகளில் மிதக்கவிடப்பட்டது பேசுபொருளாக மாறியது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு கொரோனாவை கட்டுபடுத்தம் பணியை சரியாக கையாளவில்லை என காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு தரப்பினர் கடுமையாகச் சாடினர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில், கொரோனா தொற்றை படிப்படியாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கட்டுப்படுத்தியதை, ஆஸ்திரேலியா எம்.பி. கிரெய்க் கெல்லி வெகுவாக பாராட்டி ட்வீட் செய்துள்ளார். “இந்த பேரிடரை முறையாகக் கையாண்ட யோகி ஆதித்யநாத்திற்கு எனது வாழ்த்துகள். இதேபோல், எங்கள் நாட்டிற்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவ, முடிந்தால் நாங்கள் உங்கள் உதவியை பெற்றுக் கொள்வோம்” எனத் தனது ட்விட்டரில் அவர் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு, “ஐவர்மெக்டின்” மருந்தை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததைக் ஆஸ்திரேலிய எம்.பி. குறிப்பிட்டிருந்தார். “ஐவர்மெக்டின்” மருந்தைப் பரிசோதனைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்கைகாக இதைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.