ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்!

பாரா ஆசிய விளையாட்டு பேட்டியில் ஒரே நாளில் 3 பதக்கங்களை வென்று தமிழக வீராங்கனை துளசி முருகேசன் சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு பிருவுகளிலும் பதக்கங்களை குவித்து வருகிறது. மேலும் தமிழக வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இந்த நிலையி ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 24 வயதானதமிழக வீராங்ஜனை துளசிமதி முருகேசன் பாரா பாட்மிண்டன் விளையாட்டில் ஒரே நாளில் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று, தனது பயணத்தை மிகச் சிறப்பாக நிறைவு செய்தார். குறிப்பாக, மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

துளசிமதி, மானசி ஜோஷியுடன் இணைந்து மகளிர் இரட்டையர் (SL3-SU5) பிரிவில் போட்டியிட்டார். 28 நிமிடங்கள் நீடித்த இறுதிப் போட்டியில், அவர்கள் சீனாவின் யாங் கியூக்ஸியா மற்றும் சியாவோ ஜுக்ஸியான் இணையை 21-16, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றனர்.

இதற்கு முன்னதாக, மகளிர் ஒற்றையர் (SU5) பிரிவின் இறுதிப் போட்டியில், துளசிமதி சீனாவின் யாங் கியூக்ஸியாவிடம் 18-21, 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

மேலும், கலப்பு இரட்டையர் (SL3-SU5) பிரிவின் இறுதிப் போட்டியில் நிதேஷ் குமாருடன் இணைந்து விளையாடிய துளசிமதி, இந்தோனேசியாவின் லியானி ராத்ரி ஒக்டிலா மற்றும் ஹிக்மத் ரம்தானி இணையிடம் 21-11, 19-21, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து, மற்றொரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

இவ்வாறு ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்ற துளசி மதி முருகேசனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.