திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ. 71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்,  துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ. 71 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், …

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்,  துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ. 71 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர்,  மலேசியா,  துபாய்,  சார்ஜா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமானங்கள் வந்து செல்கிறது.  அவ்வாறு விமானங்களில் பயணம் மேற்கொண்டு வரும் பயணிகள் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் துபாயிலிருந்து,  திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா
எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது ஆண் பயணி ஒருவர் தனது ஆசனவாயில் பேஸ்ட் வடிவில் 3 பாக்கெட்டுகளில் ரூ.70.58 லட்சம் மதிப்புள்ள 977 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது.  இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.