திருச்சி விமான நிலையத்தில் ரூ. 28 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் பறிமுதல் -சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் காலணியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 28 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் காலணியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 28 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை சோதனை செய்த போது காலணியில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்பிலான 467 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் -திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியா சிங்கப்பூர்,துபாய்,இலங்கை, ஷார்ஜா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.