இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வரும் வாரம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரானது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி வந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பெங்களூர், சென்னை, டெல்லி, தர்மசாலா, குவாஹாட்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐசிசி வரும் வாரத்திற்குள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் விளையாட ஒப்புக்கொள்வதற்கு காலம் தாழ்த்துவதால் அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா ’வரும் வாரத்தில் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.