குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு: புதிதாக 7 ஆயிரத்து 178 பேருக்கு தொற்று உறுதி…

நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 178 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீப…

நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 178 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று 10 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் குறைந்து புதிதாக 7 ஆயிரத்து 178 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 683ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 178 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 342 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://twitter.com/MoHFW_INDIA/status/1650377844000960518?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.