முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

பறிபோன புளூ டிக் ? பதறிய பிரபலங்கள் ! மீண்டும் வசதியை வழங்கிய ட்விட்டர் நிறுவனம்

திரைப்பிரபலன்கள் ரஜினிகாந்த், விஜய், ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் ட்விட்டர் நிறுவனம் மீண்டும் புளூ டிக் சேவையை வழங்கியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உத்தரப்பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அது போல் இந்திய பிரபலங்களான நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், தமிழ் திரையுலக நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளுக்கான ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது.

ட்விட்டர் பயனாளர்களின் வெரிஃபைடு கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கை தொடர்ந்து பெற இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருந்த எலான் மஸ்க், கட்டணம் செலுத்தாத பயனர்களின் அந்த ப்ளூ டிக் குறியீடு விரைவில் அகற்றப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் முதல் பணம் செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் குறியீடுகள் அகற்றப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பல ப்ளூ டிக் பயனர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்திய பிரபலங்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் ட்விட்டர் நிறுவனம் மீண்டும் புளூ டிக் சேவையை வழங்கியுள்ளது. இவர்களின்ட்விட்டர் கணக்குகளுக்கு பணம் செலுத்திய பிறகு இந்த சேவை வழங்கப்பட்டதா, அல்லது நிறுவனமே தானாக வழங்கியதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கிடையேயான வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு குறைவு

G SaravanaKumar

”தோனி அடிச்ச 2 சிக்ஸ் தான் ஜெயிச்சதுக்கு காரணம்….” – சிஎஸ்கே வெற்றி குறித்து ரசிகர்கள் பேட்டி

G SaravanaKumar

”எனது பெயரில் எனக்கு வீடு இல்லை; நாட்டில் பல மகள்களின் பெயரில் வீடு கொடுப்பதற்கு உழைக்கிறேன்!” – குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading