ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் இன்று பதிலுரை அளிக்கவுள்ளார். இத்துடன் இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் நிறைவுக்கு வருகிறது. இன்று நடைபெரும் சட்டப் பேரவை நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் புறக்கணித்து சொந்த ஊர்களுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையுடன் ஜனவரி மாதம் 09ம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட வரிகளை புறக்கணித்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் திடீரென வெளியேறினார்.
அதன் பிறகு ஆளுநருக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவெற்றப்பட்டது. மேலும் ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சட்டமன்றத்தில் எதிர்கட்சியான அதிமுக முதலமைச்சரின் தீர்மானத்தை புறக்கணித்து முதலில் வெளியேறியது. மேலும் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் திமுக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து சட்டப் பேரவையில் பங்கெடுத்து பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் இன்று பதிலுரை இன்று தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து முன் வடிவு செய்யப்பட்ட சட்டங்கள் நிறைவேற்ற்ப்பட உள்ளன. இன்றுடன் சட்டப்பேரவை கூட்டம் முடிவடைய உள்ள நிலையில் எதிர்கட்சியான அதிமுக வின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இன்றைய நிகழ்வை புறக்கணித்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







