அசாமில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட வாக்குப்பதிவில் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஹஃப்லாங் தொகுதியில் 90 வாக்காளர்களே உள்ள நிலையில் அங்கு 171 வாக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாஃப்லாங் தொகுதிக்கு உட்பட்ட 107(A) கோட்லிர் எல்.பி பள்ளி வாக்குச்சாவடியில் மொத்தம் 90 வாக்காளர் மட்டுமே உள்ளனர். ஆனால் தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 171 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியில் இரண்டு மடங்கு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களிடையே தேர்தல் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதன்காரணமாக ஹாஃப்லாங் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 5 தேர்தல் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அசாமில் இன்று 40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இன்று மதியம் 12 மணிநேர நிலவரப்படி 33.18% வாக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அசாமியில் மொத்தம் 126 தொகுதிகள் உள்ளது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 79 லட்சமாகும். ஆண் வாக்காளர்கள் 40 லட்சம், பெண் வாக்காளர்கள் 39 லட்சமாகும் 139 திருநங்கை வாக்காளர்கள் உள்ளனர். அசாமில் மொத்தம் 11,401 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது.