உச்சநீதிமன்றத்தின் 48 வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டேவின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் அடுத்தத் தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை நியமிக்கலாம் என்று எஸ்.ஏ பாப்டே பரிந்துரைத்தார். பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், என்.வி ரமணாவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்த என்.வி.ரமணா, கடந்த 40 வருடங்களாக நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். 2000 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும், 2013 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
2014ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் வரும் 2022 ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் இரண்டாவது நபர் பி.வி.ரமணா. இதற்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த சுப்பா ராவ் 1966-67 வரை தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.