நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இதனிடையே மவுன்ட்மாங்கானுவில் நடந்த 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சேல் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இளம் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் இந்திய அணிக்காக அறிமுகமாக உள்ளார்.
இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள்:
நியூசிலாந்து: டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), வில் யங், நிக் கெல்லி, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), கிறிஸ்டியன் கிளார்க், பிளேயர் டிக்னர், ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர்.
இந்தியா: ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், நமன் திர், ஆக்கிப் நபி, குல்தீப் யாதவ்/யாஷ் தாக்கூர், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.




