“சுந்தர் பிச்சை ஒரு அரக்கன்” – அதிபர் ட்ரம்ப் கிண்டல்!

எலான் மஸ்க், சுந்தர்பிச்சை, மார்க் ஸக்கர்பர்க் உள்ளிட்ட தொழில்நுட்ப தலைவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மற்றும் மேற்பார்வை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் (xAI), சுந்தர் பிச்சை (Google), மார்க் ஜுக்கர்பெர்க் (Meta), ஜென்சன் ஹுவாங் (Nvidia) மற்றும் கிரெக் ப்ரோக்மேன் (OpenAI). ஆகியோர் கலந்துகொணடனர்.

இக்கூட்டத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அரசாங்கம் செயற்கை நுண்ணறிவுக்கு (AI) அதிகாரப்பூர்வமாக ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ (SI) எனப் பெயர் மாற்றும் என்று அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற தொழில்நுட்பத் தலைவர்கள் அனைவரும் “White House Accord on Super Intelligence” என்ற செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்ப்பையடுத்து வெள்ளை மாளிகையில் அனைவரும் செய்தியாளர்களிடம் ஒப்பந்தம் குறித்து விளக்கி பேசினர். அப்போது ட்ரம்ப் பேசுகையில் கூகுல் சிஇஓ சுந்தர்பிச்சை ஒரு அரக்கன் என குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “தொழில்நுட்பத் துறையில் பிச்சையின் செல்வாக்கையும் வெற்றியையும் பாராட்டும் விதமாக, “இந்த ஆள் ஒரு அரக்கன், அது யாருக்கும் தெரியாது,” என்று விளையாட்டாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.