முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் அபாரம், 425 ரன்கள் குவித்தது ஆஸி.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் விளாசினார். அந்த அணி முதல் இன்னிங்ஸில், 425 ரன்கள் குவித்துள்ளது

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50.1 ஓவர்களில் 147 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 ரன்களும் ஓலி போப் 35 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பிறகு மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னரும், மார்கஸ் ஹாரிசும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

பென் ஸ்டோக்ஸ்

ஹாரிஸ் (3 ரன்) ஆலி ராபின்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து மார்னஸ் லபுஸ்சாக்னே, வார்னருடன் இணைந்தார். வார்னர் 17 ரன்னில் இருந்த போது, பென் ஸ்டோக்சின் பந்துவீச்சில் போல்டு ஆனார். ஆனால் நோ-பால் என்பதால் தப்பித்தார். மூன்று முறை அவுட் கண்டத்தில் இருந்து தப்பித்த வார்னர், 94 ரன்னில் ராபின்சன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

மிடில் வரிசையில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார். அவர் 85 பந்துகளில் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 84 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்த நிலையில், 3- வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

டிராவிஸ் ஹெட்

சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அந்த அணி, 425 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 278 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கி ஆடி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

கடன் தொல்லை; 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

Arivazhagan CM

உறைப்பனியில் உறைந்து போன நயகரா நீர்வீழ்ச்சி!

Ezhilarasan

பத்ம விருதுகளுக்கு சிபாரிசு: மக்களுக்கு மத்திய அரசு அழைப்பு

Saravana Kumar