ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த எடப்பாடி பழனிசாமி…

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் இதுவரை ஜெயலலிதாவின் வேலையாட்கள், உதவியாளர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எட்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அவரால் ஆஜராக இயலவில்லை. இந்த நிலையில் இன்று காலை இளவரசியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.

முதல் முறையாக விசாரணைக்கு ஆஜராகும் ஓ.பன்னீர்செல்வத்திடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கேள்விகள் எழுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், போயஸ் தோட்ட பணியாளர்கள் என இதுவரை 150 பேரிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம், இளவரசி ஆகியோரின் வாக்குமூலங்களுக்குப் பின்னர் ஆணையத்தின் விசாரணை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.