ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் – கடந்து வந்த பாதை!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து, இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரை கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம். ஆகஸ்ட் 5, 2019 –…

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து, இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரை கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.

  • ஆகஸ்ட் 5, 2019 – ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு
  • ஆகஸ்ட் 9, 2019 – ஜம்மு காஷ்மீர் மாநிலம்,  ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு
  • ஆகஸ்ட் 9, 2019 – வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு
  • ஆகஸ்ட் 11, 2019 – வழக்கறிஞர் ஷாகிர் ஷபீர்,  முகமது அக்பர் லோன் உள்ளிட்டோர் வழக்கு
  • ஆகஸ்ட் 28, 2019 – முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது
  • அக்டோபர் 1, 2019: நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ்.கே.கவுல், ஆர்.சுபாஷண் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, வழக்கை நவம்பர் 14, 2019 முதல் விசாரிக்க முடிவு
  • ஜூலை 3, 2023:  உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது
  • ஜூலை 11, 2023:  வழக்கை ஆகஸ்ட் 2, 2023 முதல் விசாரிக்க தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முடிவு
  • டிசம்பர் 11, 2023 – அரசியல் சாசன அமர்வு 3 விதமான தீர்ப்பு

தீர்ப்பின் முக்கியம் அம்சங்களில் சில:

  • 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்
  • 2024 செம்படம்பருக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
  • ஜம்மு, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை விரைவில் வழங்க வேண்டும்
  • லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் என தீர்ப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.