தனியார் பல்கலைக்கழகத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி போல் பேசி சீட் வாங்க
முயற்சித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு
வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெற்றது. அப்போது
பல்கலைக்கழக நிர்வாகத்திடம், தனக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு சீட் அளிக்க
வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி போல் பேசி ஒருவர் மோசடியில் ஈடுபட முயற்சித்துள்ளார்.
இதுபற்றி பல்கலைக்கழகம் சார்பில் செங்கல்பட்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்டதாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அல் அமீன்(52) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடாக பல்கலைக்கழகத்தில் சீட் பெற முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.







