தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள
மகான் செய்யது சமசுதீன் ஷஹீது வலியுல்லாஹ் தர்காவில், ஆண்டுதோறும்
சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டும் கடந்த செப்டம்பர் மாதம்
29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் முக்கிய நிகழ்வான
சந்தனக்கூடு திருவிழா இன்று மாலை முதல் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஊர்வலத்தில், வாத்தியம்-மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் எடுத்து வரப்பட்ட
சந்தனம், மகானின் சமாதியில் பூசப்பட்டது. அப்போது உலக நன்மைக்காக சிறப்புத்
தொழுகை நடைபெற்றன.
ஊர்வலமாக எடுத்து வரப்படும் சந்தனக்கூட்டின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு
சமூகத்தினரும் செய்து அலங்கரித்து எடுத்து வருவதால், அனைத்து மதத்தினரும்
கொண்டாடும் மத நல்லிணக்க விழாவாகவும் இது நடந்து வருகிறது.
தா்ஹாவுக்கு வந்தடைந்த சந்தனக்கூடு பாரம்பரிய முறைப்படி கிராமத்தில் உள்ள
இஸ்லாமிய இளைஞா்கள், பெரியவா்கள் ஒன்றுகூடி பாட்டுபாடி களிகம்பு ஆட்டம் ஆடி
ஊா்வலமாக சென்றனா்.
இந்த விழாவில் வைப்பார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து
அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மலா்கள் வழங்கி வழிபட்டனா்.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் இந்து முஸ்லிம் என மத
பாகுபாடின்றி இணைந்து கொண்டாடுவதால் இவ் விழாவானது மத நல்லிணக்கத்திற்கு
எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.








