புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி!

புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி தொடங்கவிருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜூன மூர்த்தி, இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சென்னை…

புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி தொடங்கவிருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜூன மூர்த்தி, இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் சின்னம் மற்றும் கொடியை அவர் அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அர்ர்ஜூன மூர்த்தி, தனது கட்சிக்கு மானசீக தலைவராக ரஜினிகாந்த் இருப்பார் என தெரிவித்தார்.

நிர்வாகத்துக்காக தனியாக ஒரு தலைவர் நியமிக்கப்படவிருப்பதாக கூறிய அவர், நிர்வாக குழுவுடன் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார். ரஜினி ரசிகர்கள் தன்னை நம்பி வரலாம் என்றும் அர்ஜூன மூர்த்தி அழைப்பு விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.