முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மக்களை பற்றியும் இறைவனை பற்றியும் அறியாத ஒரு நபர் கமல் – எம்.எல்.ஏ விஜய தரணி தாக்கு!

கமல் ஹாசன் மக்களை பற்றியும் புரியாமல் இறைவனை பற்றியும் அறியாத ஒரு நபர். சக்கர நாற்காலி போன்று விமர்சனம் செய்வது பிற்காலங்களில் அவரே தன்னை கண்ணாடியில் பார்க்கும் போது புரிந்து கொள்வார் என எம்.எல்.ஏ விஜய தரணி கூறியுள்ளார்.

இதுகுறித்து கன்னியாகுமாரியில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ விஜய தரணி தெரிவித்ததாவது, “பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் மக்கள் அழுது கொண்டு இருக்கின்றனர். மோடி அரசு வரலாறு காணாத அளவு விலையை உயர்த்தி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இது போன்று விலை உயர்ந்தது என்று கூறுவது தவறான தகவல் பிற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் வைக்கும் விமர்சனம். உடனே விலை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் இவர்கள் ஆட்சியைவிட்டு வெளியே செல்லும் கதவை விரைவில் காண்பிப்பார்கள்.

யாருக்கு சக்கர நாற்காலி, யாரால் நிர்மிந்து நடக்க முடியும், யாரால் படுத்தே இருக்க முடியும் யார் ஆட்சி பொறுப்பிற்கு வர வேண்டும் என்பது மக்களும் இறைவனும் தீர்மானிப்பது. மக்களை பற்றியும் புரியாமல் இறைவனை பற்றியும் அறியாத ஒரு நபர் கமல் ஹாசன். இது போன்று விமர்சனம் செய்வது பிற்காலங்களில் அவரே தன்னை கண்ணாடியில் பார்க்கும் போது புரிந்துகொள்வர்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!

Saravana Kumar

பறவை, அணில்களுக்கும் பசிக்குமில்ல.. வைரலாகும் மாணவர்களின் செயல்!

எல்.ரேணுகாதேவி

இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

Jayapriya