ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு – அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக்…

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்பு சார்பில் 2வது நாளாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தது கட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது என்றும், அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டதாக செயற்கையான காரணத்தை கூறி கட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஓபிஎஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

பொதுச்செயலாளரை அடிப்படை தொண்டர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அதிமுகவின் விதி என்றும் அதனை மாற்ற முடியாது என்றும் கூறிய ஒபிஎஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஆனால் பொதுக்குழு மூலம் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அது கட்சி அடிப்படைக்கு எதிரானது என்றும் வாதிட்டது.

இதையும் படியுங்கள் : இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா!

உட்கட்சி ஜனநாயகத்துக்கு விரோதமாக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தினால் யாருக்கு ஆதரவு இல்லை என்பது தெரியவரும் என்றும், ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்குகளில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.